வீடொன்றில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு!

வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்தே இச் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொதட்டுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.